< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மை துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கம்
|8 Feb 2023 3:32 PM IST
காங்கிரஸ் சிறுபான்மை துறையின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மை துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முகப்பு புகைப்படம் மாற்றப்பட்டு, அரபு மொழி எழுத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக அந்த கட்சியின் சிறுபான்மை துறையின் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா ஆன்லைன் மூலம் சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஹேக்கர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு டுவிட்டர் கணக்கை மீட்டு தர வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி வலியுறுத்தியுள்ளார்.