< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
4 Nov 2022 12:15 AM IST

சங்கராபுரம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்தில் 15-வது மானியகுழு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகால் வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்டு சாலை, விரியூர் ஊராட்சியில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணி உள்பட சங்கராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை தரமாக கட்டவேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஒன்றியபொறியாளர்கள் அருண்பிரசாந்த், ஹரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அலெக்ஸ்சாண்டர், செல்வராஜ், ஊராட்சி செயலாளர்கள் அருள், ஆபேல் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்