< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ஆட்சிமொழி சட்ட வாரத்தையொட்டி அரசு பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு
|2 March 2023 12:00 AM IST
ஆட்சிமொழி சட்ட வாரத்தையொட்டி அரசு பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வாரம் நேற்று தொடங்கி 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் அரசு பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசுப்பணியாளர்களுக்கு மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சிவசாமி சுற்றோட்டக்குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், குறிப்பாணை, அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் வைத்தல் தொடர்பாக பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் அரசு பணியாளர்கள் செயல்முறை ஆணைகள், அலுவலக குறிப்புகளை எப்படி எழுதுவது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முடிவில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) சித்ரா நன்றி கூறினார்.