< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அரியலூரில் இன்று ஆட்சிமொழி கருத்தரங்கம்
|27 July 2023 12:56 AM IST
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அரியலூரில் ஆட்சிமொழி கருத்தரங்கம் இன்று நடக்கிறது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஒரு வாரத்திற்கு 4 மாவட்டங்களில் 4 ஆட்சிமொழி கருத்தரங்குகள் என்றவாறு 38 மாவட்டங்களில் 6 மாதங்களில் 100 கருத்தரங்குகள் நடத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆட்சிமொழி கருத்தரங்கம் அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5.30 வரை நடைபெறுகிறது. இதில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.