பெரம்பலூர்
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரி ஆய்வு
|பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வேப்பந்தட்டை தாலுகாவில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் மலையாளப்பட்டி, கோரையாறு மற்றும் குரும்பலூர் பேரூராட்சி பகுதி, ஆலத்தூர் தாலுகா, காரை மலையப்ப நகர் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கண்ட பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும், விரிவாக ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்களிடமும் உரையாடி அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து பெரம்பலூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆர்.டி.ஓ. நிறைமதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) சரவணன், பெரம்பலூர் தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) சத்தியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.