< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பூங்காக்கள் அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு
|27 Dec 2022 12:50 AM IST
பூங்காக்கள் அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகளும், பழைய பூங்காக்களை பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் கமலநாதன் தமிழ் தலைமையில் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனிராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.