ராமநாதபுரம்
ரேஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு
|திருவாடானை தாலுகாவில் ரேஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு நடத்தினார்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் உள்ள ரேஷன்கடைகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன் ஆய்வு செய்தார். பணஞ்சாயல் ஊராட்சி டி.புதுக்குடி கிராமத்தில் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் மற்றும் புதுக்குடி, அடஞ்சமங்கலம் கிராம மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகரும் ேரஷன் கடை அமைப்பதற்கான இடம் மற்றும் கடையையும் அவர் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நெய்வயல், தொண்டியில் நகரும் ரேஷன் கடை அமைக்க இடத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் திருவாடானை, தொண்டி, வட்டானம், புலியூர், நெய்வயல் கிராமங்களில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்த மாவட்ட வழங்கல் அலுவலர் அரிசி, மண்எண்ணெய், சீனி, கோதுமை போன்ற பொருட்களின் இருப்பு, விற்பனை, விவரங்களை பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் திருவாடானையில் மண்எண்ணெய் பங்க் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, கோதுமை போன்ற குடிமைப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். அவருடன் வட்ட வழங்கல் அலுவலர் சிராஜுதீன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.