கள்ளக்குறிச்சி
வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
|திருக்கோவிலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ரூ.45 லட்சம் செலவில் கோசா குளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் குபேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருக்கோவிலூர் அண்ணா நகரில் ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் நடைபெற்று வரும் அறிவு சார்ந்த மையம் கட்டிடம் கட்டும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பணியை தரமாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக மண்டல நகராட்சிகளின் இயக்குனர் குபேந்திரன், திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆணையாளர் கீதா, துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் சக்திவேல், கந்தன்பாபு மற்றும் அருள்பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.