உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள்... ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
|நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரை,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலூரைச் சேர்ந்த ரமணிகோபால், வாங்கிய நிலத்திற்கான பட்டா, பஞ்சமி நிலம் என ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ரமணிகோபால் வாங்கிய நிலம் பஞ்சமி நிலம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதால், பட்டா வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும், பட்டா வழங்காமல் அதிகாரிகள் தாமதம் செய்து வந்தனர்.
இதையடுத்து, ரமணி கோபால் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றாத நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
மேலும், இருவரும் வருகிற 10ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.