திருச்சி
சாலையை விரிவுபடுத்த வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
|சாலையை விரிவுபடுத்த வந்த அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் இருந்து எடமலைப்பட்டி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரங்களை வைத்து நேர்த்தி செய்தனர்.இதில் 40 அடி அகலம் கொண்ட இந்த சாலையை இந்த பகுதியில் குடியிருக்கும் சிலர் பல அடி அகலம் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆனால் வெறும் 18 அடி மட்டுமே அளந்து சாலை போடும் பணிகள் தொடங்கியது. இதனை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் சாலை போட வேண்டாம் என்று அதிகாரிகளை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் முதல் கட்டமாக 25 அடி வரையில் சாலை அமைத்து தருகிறோம் என்று வாக்குறுதியளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.