தென்காசி
அதிகாரிகள் ஆய்வு
|கடையம் பகுதியில் அ்திகாரிகள் ஆய்வு செய்தனர்
கடையம்:
தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டம் உலக வங்கி நிதி உதவியோடு தமிழகத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை பொதுப்பணித்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளோடு இணைத்து தமிழக அரசு செய்து வருகிறது. அவ்வாறு உலக வங்கி நிதி உதவியோடு செயல்படும் இந்த திட்டத்தினை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு தமிழகம் வர இருக்கிறது அதற்கான முன்னேற்பாடு ஆய்வு பணியை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்த ஆய்வினை சென்னை தலைமை அலுவலகத்தில் முனைவர் கிருஷ்ணன் தலைமையில் குழு ஆய்வு செய்தது. முனைவர் செல்வா, பொறியாளர்கள் தங்கம், சந்திரசேகர் உள்ளிட்டோர் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி ஆலோசனைப்படி கடையம் வட்டாரம் ரவணசமுத்திரம் கிராமத்தில் தோட்டக்கலை பணிகளை ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன்குமார் தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, ரூபியா, உதவி தோட்டக்கலை பானுமதி மற்றும் இசக்கியம்மாள் உடனிருந்தனர்.