நாகப்பட்டினம்
அதிகாரிகள் ஆய்வு
|திருமருகல் அருகே புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கான இடங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் மற்றும் திருப்பயத்தங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொட்டாரக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான இடங்களை திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் மணி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், ஆரூர் மணிவண்ணன், அபிநயா அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.