தஞ்சாவூர்
தஞ்சையில், 15 ரேஷன்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை
|முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறதா? என தஞ்சையில் 15 ரேஷன்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்;
முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறதா? என தஞ்சையில் 15 ரேஷன்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ரேஷன்கடைகளில் முறைகேடு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் முறைகேடாக பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.காமினி அதிரடி சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன்பேரில் திருச்சி மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் உதயகுமார் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
15 கடைகளில் சோதனை
தஞ்சை நகரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ரேஷன்கடைகளுக்கு சென்று அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள இருப்புகளை பார்வையிட்டு, பதிவேட்டையும் ஆய்வு செய்தனர். மேலும் முறைகேடாக ரேஷன்கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அங்குள்ள பொதுமக்களிடமும் கேட்டறிந்தனர்.தஞ்சை மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் உணவு பொருட்கள் முறைகேடாக விற்பனை செய்வது, திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
----------