< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு - மாவட்ட கலெக்டர் தகவல்
|29 May 2022 4:56 AM IST
நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தின் பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் தற்போது ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார்.
கல்குவாரிகளின் உரிமம் சரியாக உள்ளதா, விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதற்காக 18 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இது குறித்த ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.