< Back
மாநில செய்திகள்
தற்காலிக பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

தற்காலிக பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
16 Oct 2022 1:12 AM IST

எருமபட்டியில் தற்காலிக பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு செய்தனர்.

எருமப்பட்டி

எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தற்காலிக கடைகள் வைக்கும் இடங்களை நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு வைக்கும் இடம் பாதுகாப்பாக உள்ளதா? ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கான முன்னேற்பாடுகள் உள்ளதா? என அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார், எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்