< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் பராமரிப்பு பணியை அதிகாரி ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியை அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
16 July 2022 12:57 AM IST

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியை அதிகாரி ஆய்வு செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் ஊராட்சி பகுதியில் காவிரிக்கரையோரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் பயனாளிகளை கொண்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு தனித்தனி பைகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகள் குறிப்பிட்ட காலம் வளர்ந்த பின்பு தேவையான ஊராட்சி பகுதிக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு மரக்கன்றுகள் பராமரிப்பு பணியை மாவட்ட திட்ட அலுவலர் மந்திராச்சலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், தவமணி, பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்