< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
|23 Jun 2022 4:13 PM IST
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி(வயது58). இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு நத்தம் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை தனது மகன் யுவராஜ்(30) என்பவர் பெயரில் திருத்தம் செய்ய திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளார்.
அதற்கு பதிவறை எழுத்தர் சிவஞானவேல்(48) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ராசயணம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை யுவராஜ், எழுத்தர் சிவஞானவேலிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் சிவஞானத்தை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது