< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்
துர்க்கையம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
|25 Oct 2023 6:07 PM IST
துர்க்கையம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் அமைச்சர் கயல்விழி வழங்கினார்
தாராபுரம்
தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த கோவிலில் அமர்ந்து நெல் மணியில் முதல் எழுத்து எழுதிய பின்பு பள்ளியில் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கோவில் பக்தர்கள் சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பிறகு குழந்தைகளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்களிடம் உரையாடினார்.