< Back
மாநில செய்திகள்
கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
25 July 2023 5:13 AM IST

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 அம்ச கோரிக்கை

நிலக்கடலை, தேங்காய் போன்ற விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். மயில், காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 18 இடங்களில் கடந்த 5-ந் ேததி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாலை தரையில் கொட்டி...

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி நேற்று பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் பேட்டை சுரேஷ் ராஜு, கோபாலகிருஷ்ணன், சண்முகம், பிரகாஷ், மூர்த்தி, சுப்பிரமணி உள்பட விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்