< Back
மாநில செய்திகள்
தேனி பால்வளத்துறையின்துணை பதிவாளர் பணி இடைநீக்கம்
தேனி
மாநில செய்திகள்

தேனி பால்வளத்துறையின்துணை பதிவாளர் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
15 July 2023 6:45 PM GMT

தேனி பால்வளத்துறையின் துணை பதிவாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தேனி மாவட்ட ஆவினில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஆவின் பால் கொள்முதல் செய்யும் அளவு குறைந்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த சராசரி கொள்முதல் அளவு பாதியாக குறைந்தது. இதனால் தேனி மாவட்ட பால்வள துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் பட்டுவாடா பணத்தில் முறைகேடு நடப்பதாக பால்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதன்பேரில் பால்வளத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், தேனி மாவட்ட பால்வளத்துறை துணைப் பதிவாளர் கணேசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் பிறப்பித்துள்ளார். மேலும், அந்த உத்தரவில் இந்த முறைகேடு தொடர்பான விசாரணை முடியும் வரை துணைப் பதிவாளர் கணேசன் தேனி மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி பால்வள துணைப் பதிவாளராக, திண்டுக்கல் பால்வள துணைப் பதிவாளர் சண்முகநதி கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்