< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின்   வேலை நேரம் மீண்டும் மாற்றம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மீண்டும் மாற்றம்

தினத்தந்தி
|
30 Jun 2022 10:39 PM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மீண்டும் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மீண்டும் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தபால் நிலையம்

மயிலாடுதுறை மணிகூண்டு அருகே பஜார் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தது. இதை தொடா்ந்து பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு அந்த பகுதி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று வெளியானது.

வேலை நேரம் மாற்றம்

இதன் எதிரொலியாக தபால் நிலையத்தில் வேலை நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை பஜார் தபால் நிலையத்தின் வேலை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதற்கு பதிலாக, காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்