< Back
மாநில செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்து: அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து: "அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
3 Jun 2023 10:48 PM IST

ஒடிசாவிலேயே தங்கி மீட்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு குழுவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 288 பேர் பலியாகி உள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 56 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் ஒடிசாவிலேயே தங்கி மீட்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு குழுவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை.

தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்