< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
|4 Jun 2023 12:15 AM IST
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர்,
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த, காணாமல் போனவர்களில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்க கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். எனவே பொதுமக்கள் 04142-220700 ஆகிய கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.