< Back
மாநில செய்திகள்
ஒடிசா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஒடிசா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே

தினத்தந்தி
|
29 Jan 2024 9:33 PM IST

பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம், குர்தா ரோடு- பிரம்மாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிப்ரவரி 1-ந் தேதி தாமதமாக புறப்படும்.

அதன்படி, புவனேஸ்வரில் இருந்து பிப்ரவரி 1-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12830) 3 மணி நேரம் தாமதமாக மாலை 3.10 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து புறப்படும்.

அதே தேதியில், மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054) 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்