< Back
மாநில செய்திகள்
புவனகிரியில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

புவனகிரியில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

தினத்தந்தி
|
21 March 2023 1:25 AM IST

புவனகிரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.


புவனகிரி,

புவனகிரி பேரூராட்சியில் கடைவீதி மற்றும் ஒரு வழிப்பாதை உள்ளது. இந்த சாலைகள் மிகவும் குறுகியதாக இருக்கிறது. இந்த சாலைகளில் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

அதாவது, புவனகிரி முதல் கீழ்புவனகிரி வரையிலும், மேல்புவனகிரி பயணியர் விடுதி, ஒரு வழிப்பாதை முழுவதில் இருந்து ஆக்கிரமிப்புகளை கடைளை அகற்றினர்.தற்போது ஆக்கிரமிப்பு செய்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் அந்த இடங்களில் பூக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட கடைகள் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இதை அறிந்த நெடுஞ்சாலை துறை அலுவலர் பரமேஸ்வரி தலைமையிலான நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நேற்று புவனகிரி கடை வீதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் புவனகிரி போலீசார் உதவியுடன் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பூக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட கடைகளை அகற்றி, தாங்கள் கொண்டு வந்த சரக்கு வாகனத்தில் ஏற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதை பார்த்து மற்ற வியாபாரிகள் தாங்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அவசரம், அவசரமாக அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர்.

இதனால் புவனகிரி கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்