< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்பு:சிவசேனா கட்சியினர் புகார்
|8 July 2023 12:15 AM IST
போடி அருகே பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சிவசேனா கட்சியின் மாநில தலைவர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், 'போடி அருகே மீனாட்சிபுரம் விலக்கில் பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பஸ்சுக்கு சிரமத்தோடு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சாலையில் காத்திருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி நிழற்குடையை மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.