< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
|21 Oct 2022 10:29 PM IST
தேனியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
தேனி ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவு பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இந்த நினைவு பீடத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், போலீசார் அணிவகுத்து நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீசார் செய்திருந்தனர்.