< Back
மாநில செய்திகள்
பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
12 Sept 2023 12:15 AM IST

திருவெண்காடு அரசு தொடக்கப்பள்ளியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிஜக்கப்பட்டது.

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட மெய் கண்டார் அரசினர் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பாரதியாரின் 102-வது நினைவு நாளையொட்டி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி பள்ளி வளாகத்தில் மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான முருகன் கலந்து கொண்டு பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்