< Back
மாநில செய்திகள்
தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மாநில செய்திகள்

'தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை' ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தினத்தந்தி
|
12 Jan 2024 3:26 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுராபுரியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுராபுரியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். கட்சியின் சட்டவிதிப்படி, தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டிய உரிமை இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். விதியை வகுத்தார். அந்த உரிமை இன்றைக்கு அபகரிக்கப்பட்டு இருக்கிறது.

இப்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். தனிக்கட்சி தொடங்க மாட்டோம் என்று அறிவித்து விட்டோம். தனிக்கட்சி என்று ஆரம்பித்தால் நாம் போட்டுள்ள வழக்கு வேறுவிதமாக போய்விடும். அதற்கு நமக்கு துளிகூட எண்ணமில்லை. அ.தி.மு.க.வை கபட வேடதாரி குழுவில் இருந்து மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்பதே நமது இலக்கு.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்