< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் அணி பொதுக்கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அணி பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
3 April 2023 1:36 AM IST

சேரன்மாதேவியில் ஓ.பன்னீர்செல்வம் அணி பொதுக்கூட்டம் நடந்தது.

சேரன்மாதேவி:

அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, நெல்லை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் உள்ள தேவர் திடல் பகுதியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ரவி பத்மநாபன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கணபதி, நகர செயலாளர் மாசானம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிப்சன் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கதிரவன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன், கழக செய்தி தொடர்பாளர் கண்ணன், தலைமை கழக பேச்சாளர் இசக்கியப்பன் ஆகியோர் பேசினர். நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு இலவச சேலையும், தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேலச்செவல் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்