< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் - வரும் 20ம் தேதி நடைபெறும்
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் - வரும் 20ம் தேதி நடைபெறும்

தினத்தந்தி
|
11 Aug 2023 10:43 AM IST

சென்னையில் வரும் 20ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் அணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.எ. ஆடிட்டோரியத்தில் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்