< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்டச்செயலாளராக ஆர்.வீ. ரஞ்சித்குமார் நியமனம் - அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்டச்செயலாளராக ஆர்.வீ. ரஞ்சித்குமார் நியமனம் - அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
28 July 2022 2:06 PM IST

ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்டச்செயலாளராக ஆர்.வீ. ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனி சாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமாரை அறிவித்தார். இதையடுத்து ரஞ்சித்குமார் நேற்று வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கருக்குப்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டி புகழ் பெற்ற முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அவர் 501 தேங்காய்களை உடைத்து அர்ச்சனை செய்து வேண்டி கொண்டார். அண்ணாநினைவு இல்லத்துக்கு சென்று அங்கு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும், பெரியார் உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் புல்லட் கே.பரிமளம் வீட்டில் அமைந்துள்ள

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு கிரேன் வாகனம் மூலம் மலர் தூவி ராட்சத மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் சோமங்கலம் ரமேஷ், வாலாஜாபாத் ஜெயகாந்தன், மகளிரணி கோமளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாணிக்கம், வக்கீல் ஆர்.வீ.உதயன், யோகானந்தம், வஜ்ஜிரவேல், ஆனந்தன், ராஜகுளம் முனுசாமி, மார்க்கெட் ராஜி, 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷாலினி வேலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்