மதுரை
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் - அய்யப்பன் எம்.எல்.ஏ. தகவல்
|ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்தப்போவதாக அய்யப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்
திருமங்கலம்
திருமங்கலம் பயணியர் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் கட்சியில் இணைந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 40 பேரையும் நிறுத்தி வெற்றி பெறுவோம்.3-ந் தேதி காஞ்சீபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் புரட்சி பயணம் மேற்கொள்கிறார். கப்பலூர் சுங்கச்சாவடியை மேலக்கோட்டை தாண்டி தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடி அமைத்து 10 ஆண்டுகள் ஆகிறது. பராமரிப்பு செலவு தாண்டி பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வசூல் செய்து வந்தனர். இதை கேட்க யாரும் இல்லை. இதற்காக போராட்டம் செய்ய பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜாமணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.