< Back
மாநில செய்திகள்
இறுதித்தீர்ப்பு இறைவன் கையில் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மாநில செய்திகள்

"இறுதித்தீர்ப்பு இறைவன் கையில்" மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினத்தந்தி
|
11 Nov 2023 4:45 AM IST

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்பது எப்போதும் எங்களின் கருத்து.

மதுரை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறை என்பது மிகவும் முக்கியமானது. மத்திய அரசின் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குகின்ற ஒரு துறை. அந்த மக்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அதை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதிய கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் அடித்தளமான கருத்து. நீட் தேர்வுக்கும் சாதிய கொடுமைகளுக்கும் முடிச்சு போடுவது சரியல்ல. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்பது எப்போதும் எங்களின் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அ.தி.மு.க. தொடர்பான வழக்கு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இறுதித்தீர்ப்பு இறைவன் கையில் உள்ளது என கூறிச்சென்றார்.

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கு வருகிற 15-ந்தேதி விசாரணை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்