< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை விலைபேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை விலைபேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
26 Aug 2022 7:00 PM IST

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை விலைபேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

அதிமுக தொண்டர்களை விலைக்கு வாங்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாகவும் விலை பேசும் யுத்தத்தை அவர் தொடங்கியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இன்றைக்கு ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ், அதை ஈடு செய்வதற்காக தனக்கு தற்போது செல்வாக்கு உள்ளதைப் போல காட்டிக் கொள்ள இதுவரை மவுன யுத்தத்தை நடத்திய அவர், இப்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கி இருப்பதாக ஆங்காங்கே தொண்டர்களும் நிர்வாகிகளும் எங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

பதவி, பணம் என்று விலைபேசி நீங்கள் மேற்கொண்டு வருகிற அந்த நடவடிக்கைகள் உண்மையான விசுவாசத் தொண்டர்களை வேதனையடையச் செய்திருக்கிறது. நீங்கள் விலைபேசி யாரை வேண்டுமானாலும் கொள்முதல் செய்து கொள்ளுங்கள். ஆனால் அவர்கள் உண்மையான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்.

தொண்டர்களுக்கு பதவிகளையும் பணங்களையும் கொடுத்து ஆசை வார்த்தை கூறி விசுவாசத்திற்கு விலை பேசுகிற உங்கள் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்