< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!
|19 March 2023 10:22 AM IST
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கு சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் குறித்த வழக்கின் முடிவு மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.