< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

தினத்தந்தி
|
27 Jan 2023 11:16 AM IST

தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. அதில் ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம பூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ள கே. கல்யாணசுந்தரம் பிள்ளை, வடிவேல் கோபால், மாசி சடையான், பாலம் கல்யாணசுந்தரம் மற்றும் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், இவர்கள் அனைவரும் மேலும் பல விருதுகளை பெற எனது நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்