< Back
மாநில செய்திகள்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் - கட்சி நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
மாநில செய்திகள்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் - கட்சி நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தினத்தந்தி
|
22 Jan 2023 3:05 PM IST

அனைத்து மாவட்டங்களிலும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தாய் மொழியாம் நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் நாள் மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அன்னைத் தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25-01-2023 - புதன்கிழமை அன்று, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்களில் மொழிப் போர்த் தியாகிகளின் திருவுருப் படங்களை வைத்து மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்துமாறு அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள என வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்