< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு திமுக சார்பில் நேரில் அஞ்சலி
|25 Feb 2023 9:54 PM IST
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு திமுக சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேனி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு திமுக சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி, மகாராஜன் எம்.எல்.ஏ.. மற்றும் தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.