< Back
மாநில செய்திகள்
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
மாநில செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

தினத்தந்தி
|
16 March 2024 12:37 PM IST

தேர்தல் ஆணையம் தலையிட்டு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும்

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தேர்தல் நெருங்குவதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க புகழேந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு இன்று எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 2024 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு படிவம் ஏ மற்றும் பி-ல் கையெழுத்திடும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால் இரட்டை இலை சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என அச்சப்படுகிறோம்.

எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்