< Back
மாநில செய்திகள்
அனைவரும் ஒன்று பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் நினைக்கிறார் - ரவீந்திரநாத் எம்.பி
மாநில செய்திகள்

அனைவரும் ஒன்று பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் நினைக்கிறார் - ரவீந்திரநாத் எம்.பி

தினத்தந்தி
|
20 Aug 2022 5:13 PM IST

சாமானியர்கள் அனைவரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அதிமுக என கூறினார்.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார். இருந்தாலும், அவர் அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைத்து வருகிறார்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். திமுக வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

மேலும், அவர் பேசுகையில், மத்திய அரசின் மூலமாக பணிகள் கிடைக்கும் என்பது அதிமுகவின் ஒரு ஆசை, பதவியை எதிர்பார்த்து எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டோம் என்றார்.

அதிமுகவில் சசிகலா இணைவது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,

கழக ஒருங்கிணைப்பாளர் கூறியது போல் அதிமுகவை பொருத்தவரை அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்