< Back
மாநில செய்திகள்
பெரியபாளையம் கோவிலின் 130 கிலோ நகைகள் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு; அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு
மாநில செய்திகள்

பெரியபாளையம் கோவிலின் 130 கிலோ நகைகள் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு; அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு

தினத்தந்தி
|
30 Jun 2022 10:36 AM IST

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலின் 130 கிலோ நகைகளை தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் அருகே பெரியபாளையத்தில் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக வரப்பெற்ற பயன்படுத்த இயலாத 130 கிலோ 512 கிராம் தங்க நகைகளை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்களின் முதன்மை செயலாளர் எம்.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்