< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

தினத்தந்தி
|
2 March 2023 6:45 PM GMT

சின்னசேலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

சின்னசேலம்,

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் இந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. எனவே இதனை பயனாளிகள் சரியாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார். இதில் சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு துணை தலைவர்அன்புமணி மாறன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன், சின்னசேலம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்