< Back
மாநில செய்திகள்
ஊட்டச்சத்து மாத விழா
திருவாரூர்
மாநில செய்திகள்

ஊட்டச்சத்து மாத விழா

தினத்தந்தி
|
19 Sept 2022 12:15 AM IST

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கி பேசினார். இதில் நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், விவசாய துணை இயக்குனர் ஏழுமலை, மாவட்ட திட்ட ஒருங்கிைணப்பாளர் சக்திவேல், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா கலந்து கொண்ட 120 பேருக்கு பழக்கன்றுகள், மருத்துவ குணமரங்கன்றுகள் வழங்கப்பட்டது. சர்வதேச சிறுதானிய ஆண்டு முன்னிட்டு கண்காட்சி நடந்தது. இதில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், உணவு தட்டில் இருக்கவேண்டிய உணவுகள், வேலை பளுவை குறைக்க உதவும் பண்ணை கருவிகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் பேரளம் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஜெகதீசன், செல்வமுருகன், கருணாகரன், பெரியார் ராமசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாட்டினை திட்ட உதவியாளர்கள் ரேகா, சகுந்தலா, நக்கீரன் மற்றும் சுரேஷ் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்