சிவகங்கை
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
|கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் சிவகங்கையை அடுத்த முடிகண்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன் தலைமை தாங்கினார். முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யமூர்த்தி கீழப்பூங்குடி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பில்லூர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பத்மாவதி சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் தமிழக அரசின் பள்ளி குழந்தை கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் இருபள்ளி மாணவர்களுக்கு கண்கண்ணாடிகள் மற்றும் 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். முகாமில் இ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தம், சிறுநீர் பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டது.