< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

புதுக்கோட்டையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

புதுக்கோட்டையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

ஊட்டச்சத்து பெட்டகங்கள்

தூத்துக்குடி புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்ப்பிணி பெண்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கவும் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோக கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தை பெற்றெடுத்த பின் மருத்துவ பெட்டகம் வழங்கப்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சி

பெண்கள் வளர்ச்சியில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்து முடித்து கல்லூரி செல்லும் போது ஆயிரம் உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதற்கேற்ப அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றார்.

இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், சேர்மன் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், ராமராஜ், முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், முன்னாள் யூனியன் சேர்மன் வி.பி.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்