< Back
மாநில செய்திகள்
மளிகை கடைக்காரரை ஏமாற்றி நூதன திருட்டு: வாலிபர்களுக்கு வலைவீச்சு
கரூர்
மாநில செய்திகள்

மளிகை கடைக்காரரை ஏமாற்றி நூதன திருட்டு: வாலிபர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
17 Feb 2023 7:01 PM GMT

புகழூர் ேமம்பாலம் அருேக மளிகை கடைக்காரரை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபா்களை ேபாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நூதன முறையில் திருட்டு

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் கடந்த பல ஆண்டுகளாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் சரவணன் (வயது 48). இவர் நேற்று மளிகை கடையில் இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது சரவணன் அதற்கு ரூ.6 ஆயிரத்து 400 தர வேண்டும் என அவர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஒருவர் மூலம் ஜிபே மூலம் ரூ.6 ஆயிரத்து 400 செலுத்தி விட்டோம் எனக்கூறினார். ஆனால் பணம் எதுவும் வரவாகவில்லை. அதற்குள்ள ஒருவர் அந்த 4 சூரிய காந்தி எண்ணெய் பெட்டிகளையும் எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வைத்து செல்ல தயாரானார். இதையடுத்து தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர்.

போலீசார் வலைவீச்சு

இதன்பிறகு தான் சரவணன் தனது வங்கி கணக்கை சரி பார்த்தபோது, அதில் எந்த பணம் வரவு வைக்கவில்லை எனவும், 2 வாலிபர்களும் அவரிடம் நூதன முறையில் 4 பெட்டி எண்ணெய் பெட்டிகளையும் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்