< Back
மாநில செய்திகள்
நர்சிங் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர்
மாநில செய்திகள்

நர்சிங் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
14 Jan 2023 12:30 AM IST

நர்சிங் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் புகையில்லா போகியை வலியுறுத்தி நகராட்சி சார்பில் நர்சிங் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொடங்கி இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நகராட்சிக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தை நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தொடங்கி வைத்தார். நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷ்யாம் கர்னல் வரவேற்றார். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் காற்று மாசு படுவதை தவிர்ப்போம். புகையில்லா போகியை கொண்டாடுவோம். மக்கும்- மக்காத கழிவு பொருட்களை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். ஊர்வலத்தில் நர்சிங் மாணவிகள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்