< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
குழந்தையை பெற்றெடுத்த நர்சிங் மாணவி-போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
|23 Oct 2022 7:20 PM IST
நர்சிங் மாணவி குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 19). இவர் 18 வயதான நர்சிங் முதலாமாண்டு படித்து வரும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த 22-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மாதேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.