< Back
மாநில செய்திகள்
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர்
மாநில செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
22 May 2022 11:31 PM IST

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை,

நர்சிங் கல்லூரி மாணவி

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையம் அருகே ஒரு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்த ஒரு மாணவியை அக்கல்லூரியின் முதல்வரான குளித்தலை காவிரிநகர் பகுதியை சேர்ந்த வக்கீலான செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அச்சிறுமியை அவர் மிரட்டி, திட்டி, தாக்கியுள்ளார்.

பாலியல் தொந்தரவு

இதற்கு அந்த கல்லூரியின் விடுதி காப்பாளராக பணிபுரியும் அமுதவள்ளி, சமையலர் மகா ஆகிய 2 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு அங்கு பணிபுரியும் 2 பெண்கள் உடந்தை யாக இருந்ததாக அந்த சிறுமி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் செந்தில்குமார், அமுதவல்லி, மகா ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.செந்தில்குமார் தற்போது நோட்டரி பப்ளிக் வக்கீலாகவும், அ.தி.மு.க. பிரமுகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்